Saturday, May 26, 2012

விஷ்ணுவர்தன்- ‘தல’ தெலுங்கு படத்தில் நாகர்ஜுனா, ரவி தேஜா!

அஜீத் குமாரை வைத்து விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் தெலுங்கு ஹீரோக்களான நாகர்ஜுனா, ரவி தோஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். அஜீத் குமாரை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படம் எடுக்கின்றார் என்றும், அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, அரவிந்த்சாமி, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்றும் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கிறார்களாம். தமிழில் தல இருக்கிறார் ஆனால் ஆந்திராவில் படத்தை ஓட்ட அங்குள்ள ஹீரோக்களை போட்டால் நன்றாக இருக்கும்